சிவமாலை: நாவல் விமர்சனம்

இந்நூல், சாதி குறித்த நமது பல்வேறு வகைப்பட்ட பார்வைகளில் எடுத்துப் பார்க்கத்தக்க ஒரு பார்வைதான். மேலோட்டமாகப் படித்தால், சாதி வெறி எதிர்ப்பு நாவலாகக் கொள்ளலாம் என்றாலும், அதன் பல்வேறு இழைகள் சிக்கலானதாகத் தோன்றுகின்றன.

சூஃபிக்களுடன் ஒரு மாலைப் பொழுது!

கடந்த சனிக்கிழமை காலை, நாளிதழைப் புரட்டிக் கொண்டிருந்த பொழுது கீழ்க்காணும் விளம்பரம் கண்ணில் பட்டது. ‘அடடா, அவசரப்பட்டு ஜூங்கா எனும் திரைப்படத்திற்கு டிக்கெட்டுகள் புக் செய்து விட்டோமே” … More

ஐஸ்க்ரீம் சாப்பிடுதல் பாவமில்லை!

பொதுவில் நாம் வட இந்தியர்களை விடவும் பண்பாட்டுரீதியாக முன்னேறியவர்கள் என்ற மமதை நமக்கு உண்டு. அது பகுதியளவில் உண்மையாகவே இருந்தாலும், கலை சார்ந்த துணிச்சலான வெளிப்பாடுகளில், நாம் அவர்களை விட மிகவும் பின்தங்கியே இருக்கிறோம் என்பதை பல திரைப்படங்களின் மூலம் உணர முடியும். அத்தகையதொரு அருமையான படைப்பான லஸ்ட் ஸ்டோரீஸ் (காமக் கதைகள்) எனும், ஒரு திரைப்படமாக வெளியிடப்பட்டிருக்கும் நான்கு குறும்படங்களின் தொகுப்பை, சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸில் காண வாய்ப்பு கிடைத்தது.

ஒரு ‘கம்யூனிஸ்ட்’ கிராமத்தில் நிகழ்ந்த காதல் கதை!

கதவு தட்டப்படும் ஓசை தொலைதூரத்தில் கேட்டது. திடுக்கிட்டு விழித்து எழுந்தவன், கதவைத் திறந்தேன். ஹவுஸ் ஓனர் தனது வழக்கமான அரை டிரவுசர், டீசர்ட்டுடன் நின்று கொண்டிருந்தார். கடுப்பை … More

பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம்…

அஞ்சலிகள் வீர வணக்கங்கள் முழக்கங்கள் கவிதைகள் கண்ணீர்த் துளிகள் மெழுகுவர்த்திகள் இறுதியில் எல்லாம் ஒன்றுதான். கும்பகோணம் குழந்தைகள் முத்துக்குமார் செங்கொடி முருகதாசன் வினோதினி அதே வரிசையில் அதே … More

கரை தொடும் அலைகள் #2

கடந்த ஞாயிறு காலையில் மகஇக பொருளாளர் தோழர் சீனிவாசனின் இறுதி நிகழ்விற்கு சென்றிருந்தேன். அவ்வமைப்பிலிருந்து விலகி விட்ட போதிலும், அவர் மீதான அன்பின், மரியாதையின் காரணமாக அவரது … More

ஆரக்க்ஷன்: யாருக்கு எதிரானது?

கடந்த வெள்ளியன்று வெளியான ‘ஆரக்க்ஷன்’ (இடஒதுக்கீடு) திரைப்படம், வெளியாகும் முன்பே பஞ்சாப், ஆந்திரா, உத்தரப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. பிற மாநிலங்களிலும் சிற்சில … More

தோபி காட்: நுட்பமான திரைமொழி!

சில திரைப்படங்கள் திரையரங்கை விட்டு வெளியேறியவுடன் மனதை விட்டும் வெளியேறி விடுகின்றன. சில திரைப்படங்கள் கரை அலம்பும் அலைகளாய் மீண்டும் மீண்டும் நினைவில் எழும்பிக் கொண்டிருக்கும். சமீபத்தில் … More

மே-17: ஓயாது நினைவுகள்!

இனி ஒவ்வொரு ஆண்டும் பல கவிஞர்கள் தவறாமல் கவிதைகள் எழுதும் நாளாயிருக்கும். அவற்றில், எது உண்மையான உணர்ச்சியிலிருந்து எழும்பியது, எது வார்த்தைகளை மடித்துப் போட்டது என்பது, சித்தி … More

திசை-II

காலம் முயங்கிய இருண்ட இரவில், வறண்ட கடலின் வழியே கட்டுமரத்தில் கால் ஊன்றி, வான்கா வார்த்தைகளற்று துடுப்பு வலித்துக் கொண்டிருந்தான். சுழன்றடித்த சூறாவளியில் திசைகள் தடுமாறின. துவங்கிய … More

உன்மத்த நிலையின் 360 டிகிரி!

“ஸீரோ டிகிரியை எழுதிய போது இருந்த அதே உன்மத்த நிலையில்தான் இப்போதும் இருக்கிறேன். நேற்று காலையிலிருந்து மாலை வரை எழுதினேன். அதையெல்லாம் என் சுயநினைவிலிருந்து எழுதினேன் என்று … More

சாவித் துவாரம்!

எல்லாத் திசைகளிலிருந்தும் கற்கள் பறக்கின்றன… சாவித் துவாரத்தின் பரவசத்தோடு திரும்பும் திசையெங்கும் கூச்சல்கள்… பெயரை உறுதி செய்து பெருமூச்செறிகிறது சமூக அக்கறை. நம்பியவர்கள் விசனப்படலாம். ஆனால், நாடே … More

இரங்கல் – II

கடந்த மாதம், வங்காளத்தில் ஒரு முதுபெரும் ‘கம்யூனிஸ்ட்’ தலைவர் மறைந்தார். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் இடதுசாரிகள், கூட்டணி அரசில் பங்கேற்ற பொழுது, பங்குச் சந்தைகள் சரிந்தன.  உலகமயமத்தின் … More

இரங்கல்!

உனக்கு எதிரிகளே இல்லை என்கிறாயா..? உண்மையில், அது பரிதாபத்திற்குரியது நண்பனே… உனது தற்பெருமை பொருளற்றது. கடமையுணர்வோடு வீரர்கள் களம் புகும் பெரும் போரில் குதித்தவன், நிச்சயம் எதிரிகளைப் … More

தார்மீகத் திசைகாட்டி!

குறிப்பு: மனித உரிமைப் போராளி முனைவர் கே.பாலகோபாலின் நினைவாக இப்பதிவு எழுதப்பட்டுள்ளது. திரு.கோ.சுகுமாரன் எழுதிய இரங்கலிலிருந்து சில மேற்கோள்களும், எழுத்தாளர் வ.கீதா எழுதிய இரங்கலின் மொழியாக்கமும் தரப்பட்டுள்ளது. … More