நிழல்

உனது கண்ணுக்குப் புலப்படாத நிழலொன்று எனக்கு உண்டு. அது உனக்குப் புலப்படும் பொழுதிலோ, நான் நிழலாகியிருப்பேன். எனது நிழலின் தலையில் இரு சிறிய, வளைந்த கொம்புகள் முளைத்திருக்கும்.

மழைப் பாடல்கள் #1

“ஒரு துளிக்கே
மரணமென்றால்
எனக்கு மட்டும் ஏன்
இத்தனை கோப்பை விஷம்?”
எனும் வரிகளை
நீ எடுத்து வைத்தாய் சாம்.

நந்தவனத்தின் ஆண்டிக்கு…

இந்தநாள் முற்றிலும் எதிர்பாராத நாளல்ல. இப்படி ஒரு நாள் வரும் என்று தெரியத் தான் தெரியும். அவர் சில வருடங்களாகவே உடல்நலக் குறைவுடன்தான் இருந்தார். அவர் எழுதுவதை நிறுத்தி பல்லாண்டுகள் ஆகி விட்டன. ஆயினும், இன்று அவர் இறந்து விட்டார் என்ற செய்தி உருவாக்கும் ஒரு இனம் புரியாத மெல்லிய சோகத்தை எப்படி புரிந்து கொள்வது?