காலா: சாமியார் கண்ட ஷோலே!

ரஞ்சித் இதனை அறியாமல் செய்திருக்கிறார் என சொல்ல முடியாது. அறிந்தே தான் செய்திருக்கிறார். ரஜினியை வைத்தே, வணிக சினிமாவின் வரையறைகளுக்குள்ளாகவே, ஒரு வித்தை போல ஒரு கலகத்தை நிகழ்த்துவதே அவரது நோக்கமாக வெளிப்படுகிறது. இங்கே பிரச்சினை என்னவென்றால், சினிமா உண்டாக்கும் கட்டற்ற பிரதிபலிப்புகள், நமது சமூகத்தின் அடக்கப்பட்ட மனங்களில் கட்டமைக்கும் ஆழமான பாதிப்புகள் அனைத்தும் சரியே என்றாலும், ரஜினி அல்லது கமல் அல்லது ஷாருக்கான் நல்லவர் எனும் அடிப்படையான, உறுதிபெற்ற சட்டகத்தை உடைக்காமல் விடுவதே.

ஐஸ்க்ரீம் சாப்பிடுதல் பாவமில்லை!

பொதுவில் நாம் வட இந்தியர்களை விடவும் பண்பாட்டுரீதியாக முன்னேறியவர்கள் என்ற மமதை நமக்கு உண்டு. அது பகுதியளவில் உண்மையாகவே இருந்தாலும், கலை சார்ந்த துணிச்சலான வெளிப்பாடுகளில், நாம் அவர்களை விட மிகவும் பின்தங்கியே இருக்கிறோம் என்பதை பல திரைப்படங்களின் மூலம் உணர முடியும். அத்தகையதொரு அருமையான படைப்பான லஸ்ட் ஸ்டோரீஸ் (காமக் கதைகள்) எனும், ஒரு திரைப்படமாக வெளியிடப்பட்டிருக்கும் நான்கு குறும்படங்களின் தொகுப்பை, சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸில் காண வாய்ப்பு கிடைத்தது.

என் ஆலை, என் உரிமை – புரட்சிப் போராட்டம்!

தூத்துக்குடி குறித்த அரங்கக் கூட்டங்கள் நடத்துவதற்கு கூட பல அமைப்புகள் போராடும் நிலையில், சேலம் எட்டு வழிச் சாலை குறித்து துண்டுப் பிரசுரம் வினியோகிப்பதே சமூக விரோதச் செயலான நிலையில், ஸ்டெர்லைட் நிறுவனத்தின் ‘என் ஆலை, என் உரிமை’ எனும் புரட்சிப் பிரச்சாரம் மாத்திரம் தங்கு தடையின்றி தொடர்வதைக் காணும் பொழுது, நமது அமைதிப் பூங்காவில் ஜனநாயகம் பூத்துக் குலுங்குகிற அழகை நாம் ரசிக்காமலிருக்க முடியாது.

கால்பந்து: தொடரும் காதல் கதை!

காட்சி அனுபவமாக ஒரு விளையாட்டை விரும்புவது அல்லது விரும்ப மறுப்பது ஒரு புறம் இருக்கட்டும். அதனை நேரடி செயலாக, நாமே விளையாடி பார்ப்பது முற்றிலும் வேறான அனுபவம். ஏறத்தாழ, ஒரு மனித உறவின் அனைத்து இன்ப, துன்ப சாத்தியப்பாடுகளையும் உடைய அனுபவம். எனக்கும், கால்பந்துக்குமான காதல் உறவும், அப்படி ஒரு கதைதான்.

மூளைச் சலவையிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான மூன்று முத்தான வழிகள்!

மூளைச்சலவை பல வழிகளிலும் நடக்கலாம். திரைப்படம், ஆவணப்படம், செய்தித்தாள், நூல்கள், மீம்கள் என எந்த வடிவத்திலும் அவை உங்களைத் தாக்கலாம். அதனை ஒரு எளிய சோதனையின் மூலம் கண்டறிந்து நீங்கள் உங்களைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.