புயற் காற்று!

படகு

திசைகளை மாற்றும்
புயற் காற்று
ஓங்கி வீசுகிறது…
மின்னல் வெட்டுகிறது…
கொடூரச் சுழல்
எதிர்பார்த்து காத்திருக்கிறது.
படகு நடுங்குகிறது…
இதயம் படபடக்க,
வெடித்தும், வெடிக்காமலும்
சினம் இரத்தம் குடிக்க,
உள்ளூர ஆவேசம்
கொந்தளித்த போதிலும்,
பற்களை கடித்துக் கொண்டு
துடுப்புகள் இடுகிறேன்.
கடல் சீறுகிறது.
இடையில் ஒரு பறவை
இடம் தர மறுத்ததாய்
கோபம் கொண்டு பறக்கிறது…
நான் உனக்கு
என்ன பதில் சொல்வேன்?

கவிதைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . Leave a Comment »

வலி!

கை நழுவி விழுந்து
காற்றில் மிதக்கிறது பாதை.
இங்கோ, அங்கோ, எங்கோ
காத்திருக்கலாம் போதியென
பொதியாய் கழிகின்றன
பொழுதுகள்.
உற்றுக் கேள்,
உள்ளூர வெடிக்கிறது
பூகம்பம்.

கவிதைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . Leave a Comment »

எல்லைகள்…!

இந்தக் கவிதை
உனக்காக எழுதப்பட்டது.
அதனால் எனக்காகவும்
எழுதப்பட்டது.
அதனால் நமக்காக
எழுதப்பட்டது.
எல்லைகள் கலந்து
உனதானதும்,
எனதானதும்
புதிதாய்,
பொதுவானதாய்
புரிபடும் காலமிது,
கவிதை தப்புமா என்ன?

கவிதைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . Leave a Comment »