என்னைப் பற்றி…
அன்புடையீர்! எழுதுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை. எனவேதான் நான் எழுதுகிறேன்.
ஆதவன்

வனாந்தரத்தின்
முடிவில்லாப் பாதையில்
நிழலாய் தொடரும் சொற்கள்
ஒரு சூரிய வெளிச்சத்தில்
எழுத்துக்களாகின்றன…
அத்தகைய எழுத்துக்களை
அவ்வப்பொழுது
இங்கே பதிவிடுகிறேன்.
பெயர் சரவண ராஜா, பிறந்த ஊர் மதுரை, பிழைப்பு தேடி வந்த இடம் சென்னை… வாசிப்பதும், எழுதுவதும் தரும் மகிழ்ச்சியில் வாழ்பவன். மனதைத் தொடும் எழுத்தையும், திரைப்படங்களையும், ஓவியங்களையும் நேசிப்பவன். மார்க்சியத்தை புரிந்து பழகிக் கொள்ளவும், மனிதர்களை நேசிக்கவும் முயல்பவன். சில காலம் மகஇகவில் செயல்பட்டு, பின்னர் கருத்து வேறுபாடுகளால் விலகியவன். மொத்தத்தில், மொழியால் தமிழன், உண்மை வெல்ல வேண்டுமென விரும்புவதால் மனிதன்…
தனி மடல்களுக்கு saravanaraja.b@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.


Good one..
9:22 மு.பகல் இல் செப்டம்பர் 25, 2008
un ezhuthugal nesikapadum..
1:58 மு.பகல் இல் மே 8, 2012