எதையேனும்…

ஏதேனும் எழுதேன் என்றாய்.
எதை எழுத என்றேன்.
எதையேனும் எனப் பதிலளித்தாய்.
எதையேனும் என்றால் எதனை என்று கேட்டேன்.
எதுவுமா இல்லை எழுத என்றாய்.
எதுவும் இல்லாமல் இல்லையென்றாலும்
எதுவும் இல்லை என்றே தோன்றுவதால்
எதையேனும் எழுதுவதற்குப் பதிலாய்
நீ எழுதச் சொன்னதையே எழுதி விட்டேன்.





