துளிகள் – 2

அதுவும் நான்
இதுவும் நான்
எதுவோ நான்?
…
தான் போயிற்
எல்லாம் போம்
என்பதாம் சித்தர் வாக்கு.
எல்லாம் போயினும்
தான் போகாதிருத்தல்
எதுவும் போகாததன் வெளிப்பாடா?
இல்லை சித்தர் வாக்கு
சொல்லில் மட்டுமா?
…

சொற்களின் திருப்பங்கள்
திகிலூட்டுகின்றன…
வசமின்றிச் சுழலும் நாக்கு
வலிமையோடு தாக்குகிறது,
ஒரே வீச்சில்
உன்னையும், என்னையும்…
ஒன்று மற்றொன்றாய்
மாறிக் கொண்டிருக்கிறதா?





