புன்னகை!

அலுக்கும்
தனிமையின்
நிழல் பற்றி
மெல்லப் படர்கிறது
இருள்.
முடங்கும் சொற்கள்…
தொடங்கும் இருண்மை…
வேதனை தந்த
விரிசல்களெல்லாம்
மறந்து போயின.
அழையா விருந்தாளியாய்
எதிர்பாராத கணத்தில்
வந்து சேர்கிறதுன்
புன்னகையின் நினைவு.
இன்னமும் மறையாத
அந்த
அழகிய புன்னகை…
நான் சேகரித்து வைத்திருக்கும்
அன்பு ததும்பும் புன்னகை…
கண்களில்
சில்மிஷம் கனியும்
இனிய புன்னகை…
ஒரு நாள் எல்லாம் மறந்து போகும்,
அன்றும் கூட
இந்தப் புன்னகையின் நினைவில்
ஒரு கணம் உலகம் மறக்கும்
ரசவாதத்தின் காரணம்
எனக்குப் புரியாதிருக்கும்.

கவிதைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . Leave a Comment »

மறுமொழி இடுக