உருவமில்லாத சொற்கள்!

வெளி நிறைக்கும்
மழையின் இசையில்,
மெல்ல விரியும்
மனதின் இதழ்களில்
பட்டுத் தெறிக்கின்றன
நினைவின் துளிகள்.
மின்னுகின்ற
நியான் விளக்குகளின்
பிரதிபலிப்பில் எழும்பும்
நீர்க்கோலங்களாய்
தோன்றி மறைகின்றன
சொற்கள்.
நிழலாடும்
சர்ப்பம் எழுப்பும்
இனம் புரியாத உணர்வில்
நினைவுகள்
குமிழிகளாய்
எழும்பி மறைகின்றன.
குமிழிகளில்
மோதி மிதந்து,
கரைந்து வழிகின்றன
பரஸ்பரம் வெளிப்படுத்தாத
உருவமில்லாத
சொற்கள்.

கவிதைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . Leave a Comment »

மறுமொழி இடுக